முக்கிய செய்திகள்

ஏமாற்றம் தந்த ஐ.பி.எல் தொடர்: முன்னாள் வீரர் மஞ்ரேக்கர் அதிருப்தி

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      விளையாட்டு
Manjrekar--2021-10-15

என்னைப் பொருத்தவரையில் இதுவரையிலான தொடர்களிலேயே இது தான் ஏமாற்றம் தந்த ஐபிஎல் தொடர் என மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

கிரிக் இன்ஃபோ... 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான பிளே ஆஃப் தகுதிச் சுற்று முடிந்தவுடன் ஈஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட்டின் தரம் குறித்து பேசினார்.

59 ஆட்டங்கள்...

மஞ்சரேக்கர் கூறுகையில், “இந்த ஐ.பி.எல் தொடரில் 59 ஆட்டங்கள் பார்த்து முடித்துள்ளேன். ஆனால் வழக்கமான கிரிக்கெட்டின் பண்பு இந்த ஆட்டங்கள் எதிலும் வெளிப்படுவதை நான் பார்க்கவில்லை. இந்த சீசனில் என்னற்ற வீரர்கள் தங்களின் முந்தைய திறனை கூட வெளிப்படுத்த முடியாமல் ஃபார்ம் இன்றி தவித்ததால், இத்தொடரின் பல போட்டிகளில் சம்பந்தமில்லாத முடிவுகளும், ஏற்ற இறக்கங்களும் ஏற்பட்டன.

கண்காணித்து... 

இத்தொடரில் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கும், சாதாரண ஆட்டத்தை கூட வெளிப்படுத்தாத வீரர்களுக்கும் பெரும் வித்தியாசத்தை பார்க்க முடிந்தது.  நான் ஐபிஎல் ஆட்டங்களை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகிறேன். ஆனால் இந்த ஐபிஎல் தொடர் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. இதில் சில தரமிக்க வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை மிகச் சாதாரண ஆட்டத்தை பல வீரர்கள் வெளிப்படுத்தியதால் பல போட்டிகளின் முடிவுகளில் தடுமாற்றங்கள் ஏற்பட்டன.

ஏமாற்றம் தந்தது... 

 

என்னைப் பொருத்தவரையில் இதுவரையிலான தொடர்களிலேயே இது தான் ஏமாற்றம் தந்த ஐபிஎல் தொடர். சில போட்டிகளில் ஆரம்பத்தில் சில டீம்களிடையே லீடிங் கிடைத்தது. ஆனால் பின்னர் ஃபார்ம் இல்லாத வீரர்களினால் போட்டிகளின் முடிவு மாறின” இவ்வாறு மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து