முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நிகழ்த்திய சாதனைகள்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் டோனி. 

துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

300 ஆட்டங்களில்...

ஐபிஎல் 2021 இறுதிச்சுற்று ஆட்டம், டோனி விளையாடிய 300-வது டி20 ஆட்டம். டி20 கிரிக்கெட்டில் 300 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்கிற சாதனையை டோனி படைத்துள்ளார். டோனிக்கு அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளின் சமி, 200-க்கும் அதிகமான டி20 ஆட்டங்களில் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

14 ஆட்டங்களில்...

இந்திய அணிக்காக 72 டி20 ஆட்டங்களில் கேப்டனாக விளையாடிய டோனி 14 ஆட்டங்களில் வென்று 28-ல் தோல்வியடைந்துள்ளார். சிஎஸ்கே அணி கேப்டனாக 214 ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கி 131 வெற்றிகளை அடைந்துள்ளார். 81 ஆட்டங்களில் தோல்வி. சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்ட காலத்தில் 14 ஆட்டங்களில் புணே அணியின் கேப்டனாகப் பணியாற்றி 5-ல் வெற்றியும் 9-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.

4 ஐ.பி.எல் கோப்பைகள்...

 

மேலும் 2010, 2011, 2018, 2021 என நான்கு ஐபிஎல் கோப்பைகளை டோனி தலைமையில் வென்றுள்ளது சிஎஸ்கே அணி. மூன்று தசாப்தங்களில் கோப்பையை வென்ற ஒரே அணி என்கிற பெருமையும் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளது. ஐபிஎல் கோப்பைகளை ரோஹித் சர்மா 5 முறையும் டோனி 4 முறையும் வென்றுள்ளார்கள்.  அதிக வயதில் (40 வருடங்கள், 100 நாள்கள்) ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் - டோனி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து