முக்கிய செய்திகள்

தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன்

Sunil-Chhetri 2021 10 17

Source: provided

மாலே : அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்தார். 

5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 49-வது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தார். மொத்தத்தில் இது அவரது 80-வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை (80 கோல்) சமன் செய்தார். 

சேத்ரியை தொடர்ந்து சுரேஷ் வாங்ஜாம் (50-வது நிமிடம்), சஹால் சமாத் (90-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர். 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய அணி இந்த கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து