முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் படசூட்டிங்கில் விபரீதம்: நடிகர் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி

Halina 2021 10 22

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் படசூட்டிங் போது எதிர்பாரதவிதாக படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார்.

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு  அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செட் அமைத்து நடைபெற்று வந்தது.  படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடும் காட்சியை படமாக்கினார்கள். அப்பொழுது அந்த துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பலியானார். இயக்குநர் ஜோயல் படுகாயம் அடைந்தார். ஜோயலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ரஸ்ட் படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் அலெக் பால்ட்வின் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு தளங்களில் துப்பாக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளது. அப்படி இருந்தும் இது போன்ற விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. முன்னதாக தி கிரோ படப்பிடிப்பில் சினிமா துப்பாக்கியால் சுட்டதில் ப்ரூஸ் லீயின் மகன் பிரான்டன் லீ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து