முக்கிய செய்திகள்

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர், பூசாரிகள் உளிட்டோர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Sekar-Babu-2021-09-29

Source: provided

சென்னை : ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள்,பூசாரிகளின் விவரங்கள் இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தங்கள் பெயர் விடுப்பட்டு இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு 04.09.2021 அன்று சட்டப்பேரவையில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும் என்னும் அறிவிப்பை  வெளியிட்டார்.

இத்திட்டம் 11.09.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயனடையும் 9860 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் பெயர் பட்டியல் இத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறவில்லை என கருதும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் இத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி 04428339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண் மற்றும் தாங்கள் பணிபுரியும் திருக்கோயில் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கலாம். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விடுப்பட்ட பெயர்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து