முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு ஐரோப்பாவில் 2 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : கிழக்கு ஐரோப்பாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது.

இதுகுறித்து 'our world data' வெளியிட்ட தகவலில், “கிழக்கு ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவிய காலம் முதலே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் 2 கோடிக்கு அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்லனர். இதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் தினமும் பதிவு செய்யப்படும் கொரோனா தொற்றில் 20% கிழக்கு ஐரோப்பாவில் பதிவு செய்யப்படுகிறது. இதில், ரஷ்யா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில், கொரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 24 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், தங்கள் நிறுவனம் உருவாக்கிய பூஸ்டர் தடுப்பூசி 95.6% பயனளிப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து