முக்கிய செய்திகள்

மேலும் ஒரு வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின்

sivasankar-2021-09-02

Source: provided

சென்னை : 3 போக்சோ வழக்கில் இரண்டாவது வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். மேலும், போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், பாலியல் வழக்கில் கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 3 போக்சோ வழக்கில் 2-வது வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து