முக்கிய செய்திகள்

வரும் 30-ம் தேதி பல்வேறு துறை செயலாளர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை

RN-Ravi-2021-09-10

Source: provided

சென்னை : துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்களுடன் வரும் 3-ம் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக கவர்னராக ஆர்.என். ரவி கடந்த 18-ம் தேதி பதவி ஏற்றார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் நாகாலாந்து மாநிலத்தில் இதற்கு முன்பு கவர்னராக பணியாற்றினார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மூத்த மத்திய மந்திரிகளை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள அதிகாரிகள், தனக்கு திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதி உள்ளார். கவர்னரின் சார்பில் அவரது செயலாளர் எழுதி உள்ள அந்த கடிதத்தை மேற்கோள் காட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த கடிதம் விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக்கிய நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் வருகிற 30-ம் தேதி (வருகிற சனிக்கிழமை) துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்களுடன் கவர்னர் ஆர்.என். ரவி ஆலோசனை  நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் ராஜ்பவனில் நடக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து