முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயர்வு

செவ்வாய்க்கிழமை, 9 நவம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36216-க்கு விற்பனையானது. 

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 13 உயர்ந்து ரூ. 4527- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36216-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39128-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து ரூ 69.10-க்கு விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ. 69,100 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து