முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர்கள் வழங்கினர்

புதன்கிழமை, 17 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர்கள்  எ.வ.வேலு, சேகர் பாபு ஆகியோர் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த தொடர் கன மழையினால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு, அமைச்சர் எ.வ.வேலு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவுடன்  கொளத்தூர் தொகுதியில் அனைத்து வார்டுகளுக்கும் நேற்று நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். தமிழக முதல்வர் பல்வேறு அரசு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அமைச்சர்கள் திரு.எ.வ.வேலுவையும், பி.கே.சேகர்பாபுவையும் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிட உத்திரவிட்டார்.  

கொளத்தூர் தொகுதியில் பெரும்பாலான இடங்கள் தாழ்வான பகுதியாக உள்ளதால், கனமழை வரும் பொழுது அதிகபடியான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டது.  நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி மழைநீர் எல்லாப் பகுதிகளிலும் இரண்டே நாளில் வெளியேற்றப்பட்டு விட்டது.

முதலில் வார்டு எண்.69-க்கு சென்ற அமைச்சர்கள், பொது மக்களுக்கு வழங்குவதற்காக  துணிப் பைகளில் அடைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டனர்.  ஒவ்வொரு பையிலும் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து திருப்தி அடைந்த பிறகே பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியை மேற்கொண்டனர். அரிசி, போர்வை உட்பட 12 பொருட்கள் துணி பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.

வார்டு எண்.69-ல் ஞானம்மாள் தோட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர்கள் வழங்கினார்கள்.  வார்டு எண்.68-ல் உள்ள திரு.வி.க. நகர் பகுதியில் மழைநீரால் சேதமடைந்த அனைத்து தெருக்களையும் சாலைகளையும் பார்வையிட்டு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தனர்.  சிறு சிறு பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கும்படி ஆணையிட்டனர்.  அதன் பிறகு, சுமார் 5000 பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர். 

வார்டு எண்.67-ல் உள்ள ராமர் கோயில் பகுதி மூர்த்தி தெரு, ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கும் சென்று சேதமடைந்த தெருக்களையும், தண்ணீர் தேங்கி, மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்த பின்னர், பொது மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். வார்டு எண்.65 மற்றும் 64-ல் உள்ள ராஜாஜி நகர் டாக்டர் அம்பேத்கார் நகர் வினோபா நகர், கங்கா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க அவர்கள் உத்தரவிட்டனர்.  கொளத்தூர்  தொகுதி முழுவதும், நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம், கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்தனர்.   இப்பகுதியிலுள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர்கள் வழங்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து