எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மதத் தலைவர்கள் மற்றும் சல்மான் கான் போன்ற பிரபலங்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேதியின்படி, 10,41,16,963 கொரோனா தடுப்பூசிகள் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் முதல் தவணையே இன்னும் முழுமையாக செலுத்தப்படாத நிலையே உள்ளது. இதனால் சில மாநிலங்களிலும் இப்பணியை மேலும் முடுக்கிவிடுவதற்கான முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மும்பை மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் களமிறக்கப்பட்டார். தற்போது மகாராஷ்டிரா அரசு மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக சல்மான் கானைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர அமைச்சர் ராஜேஷ் தோப் ஏஎன்ஐயிடம் கூறியதாவது: ''அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மதத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை நாங்கள் பயன்படுத்த திட்டுமிட்டுள்ளோம். விழிப்புணர்வு இயக்கத்திற்கு சல்மான் கான் போன்ற பிரபலங்களை ஈடுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.''என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |