முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ. 4,500-க்கு விற்பனையானது. அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து, ரூ. 67.60-க்கு விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,600-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!