முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது: மத்திய அரசு கவலை

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

காஷ்மீர், கேரளா, கோவா உள்ளிட்ட 13 மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளதாக கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த மாநிலங்களில் பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

குறைவான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாகலாந்து, சிக்கிம், மகாராஷ்டிரா, கேரளா, கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம், லடாக் யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகள் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை ராஜேஷ் பூஷன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், உண்மையான தொற்று நிலவரத்தை கணிக்க முடியாது. குளிர் காலம் தொடங்கியுள்ளது, அதேபோல் ஒரு சில மாநிலங்களில் காற்று மாசுபாடும் அதிகமாக இருக்கிறது. இதனால், இயல்பாகவே மக்கள் சுவாசப்பாதை தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் கொரோனா பரிசோதனைகளை மாநிலங்கள் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதால் தான் நோய்த் தொற்றின் போக்கை, அது எந்த பகுதியில் தாக்கம் செலுத்துகிறது போன்றவற்றை சரியாக கணிக்க முடியும். ஆரம்பநிலை ஹாட்ஸ்பாட் கண்டறிதல் தான் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான சிறந்த உத்தி. ஆகையால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் எவ்வித சுணக்கமும் இல்லாமல் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "வளர்ந்த மேலை நாடுகள் சிலவற்றில் கொரோனா 4வது, 5வது அலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ச்சியான பரிசோதனைகளை இங்கு நாம் மேற்கொண்டால் தான் தொற்றின் வீரியத்தின் போக்கை அறிய முடியும்" என்று ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து