முக்கிய செய்திகள்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. திடீர் உள்ளிருப்பு போராட்டம்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      அரசியல்
Jyotimani- 2021 11 25

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

எம்.பி. நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

இந்த கூட்டத்தை நடத்ததுவதற்கு பல முறை வலியுறுத்தியும் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி யிடம் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனையடுத்து மாவட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாத நிலையில், ஜோதிமணி எம்.பி. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து