முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15-வது சீசன் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: சாம்ஸனை தக்கவைக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் : ஐ.பி.எல் டி20 தொடரின் 15-வது சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் கேப்டன் சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டியலை அறிவிக்க... 

15-வது ஐ.பி.எல் டி20 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ம் தேதிக்குள் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், ஐ.பி.எல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றன. டிசம்பர் மாதத்தில் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் நடைபெறுவதால், வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலை அணிகள் தயாரித்து வருகின்றன.

மீண்டும் தக்கவைக்க...

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை அந்த அணி நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளார். தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.42 கோடி கழித்து...

ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள், 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரைத் தக்கவைக்கலாம். இதில் முதலில் தக்கவைக்கும் வீரருக்கு ரூ.16 கோடி, 2-வது வீரருக்கு ரூ.12 கோடி, 3-வது வீரருக்கு ரூ.8 கோடி, 4-வது வீரருக்கு ரூ.6 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்டுள்ள வீரர்களை வாங்கும் தொகையான ரூ.90 கோடியிலிருந்து இந்த 4 வீரர்களுக்கான தொகையான ரூ.42 கோடி கழித்துக் கொள்ளப்படும். மீதமுள்ள ரூ.48 கோடியில்தான் வீரர்களை வாங்க முடியும்.

கசிந்த பட்டியல்...

இதில் புதிதாக வரும் லக்னோ, அகமதாபாத் அணிகள் 2 உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் ஏலம் தொடங்கும் முன்பே தேர்வுசெய்து தக்கவைத்துக் கொள்ளலாம். சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் பட்டியல் கசிந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து