முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது. 

 

உலக தமிழ் நிறுவனம் (ஐக்கிய பேரரசு) சார்பில் லண்டன் 4-வது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஹவுஸ் ஆப் காமன்ஸ் அரங்கில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காகவும், கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அமைச்சரின் புதல்வர் மருத்துவர் செழியன் மற்றும் அவர் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து