முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா பாட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து தோல்வி

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தாவில் நடந்து வரும் இந்தோனேசியா பாட்மிண்டன் போட்டியி்ல் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்தார்.

அரையிறுதியில்...

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இன்டானனை எதிர்கொண்டார் பி.வி. சிந்து.

4 முறை மட்டும்...

54 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் இன்டானனிடம் 15-21, 21-9, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து போராடித் தோல்வி அடைந்தார். சிந்துவுக்கு எதிராக தாய்லாந்து வீராங்கனை இன்டானன் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார். இதுவரை சிந்துவுடன் மோதி 7 முறை வென்றுள்ளார் இன்டானன் ஆனால், சிந்து 4 முறை மட்டுமே வென்றுள்ளார்.

முன்னிலை...

போட்டி தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடத் தொடங்கிய சிந்து, முதல் செட்டில் 8-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து 15-21 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். ஆனால், 2-வது செட்டில், தாய்லாந்து வீராங்கனை இன்டானன் சிறப்பாகஆடிய சிந்துவுக்கு எந்த வாய்ப்பையும் தரவில்லை. 

இறுதிக்கு தகுதி...

2-வது செட்டை இன்டாடன் 9-21 என்ற கணக்கில் வென்றார். வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி செட்டிலும் இன்டானன் ஆதிக்கமே இருந்தது, தொடக்கதிலிருந்தே சிந்துவுக்கு வாய்ப்புஅளிக்காமல் ஆடிய இன்டானன் 5-1 என்ற கணக்கிலும், பின்னர் 16-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இறுதியில் சிந்துவை 14-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இன்டாடன் தகுதி பெற்றார்.

அடுத்தடுத்து தோல்வி...

கடந்த அக்டோபர் மாதம் பிரெஞ்சு ஓபன், கடந்த 20-ம்தேதி நடந்த இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் இப்போது இந்தோனேசியா பாட்மிண்டன் என 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அரையிறுதிவரை வந்து சிந்து தோல்விஅடைந்துள்ளார். பைனலில் தென் கொரிய வீராங்கனை அன் சி யங்குடன் மோதுகிறார் இன்டாடனன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து