முக்கிய செய்திகள்

சாஹாவுக்கு பதிலாக கீப்பிங் செய்யும் பரத்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      விளையாட்டு
Bharath--2021 11-27

கான்பூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் சாஹாவுக்கு பதில் கே.எஸ். பரத் கீப்பங் செய்வார்" என டவிட்டரில் குறிப்பிட்டது.மேலும், சாஹாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் பி.சி.சி.ஐ குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவருக்கு எந்தளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்தியாவிற்காக வழக்கமாக விக்கெட் கீப்பங் செய்து வரும் ரிஷப் பந்த்க்கு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாய்ப்பு சாஹாவுக்கு கிடைத்தது. வங்காளத்தை சேர்ந்த சாஹா, உலக கிரிக்கெட்டில் தற்போது சிறந்த வீக்கெட் கீப்பராக கருதப்படுகிறார். 

ஆனால், பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர், முதல் இன்னிங்ஸ் 1 ரன்களை மட்டுமே எடுத்து தனது  விக்கெட்டை பறி கொடுத்தார். இதற்கு மத்தியில், சப்ஸ்டிடியூட் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ள பரத், உள்ளூர் போட்டிகளிலும் இந்திய 'ஏ' அணிக்காகவும் சிறப்பாக ஆடிவருகிறார். 26 வயதான பரத், உள்ளூர் போட்டிகளில் 37.24 ரன்களை சராசரியை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 9 சதத்தை அடித்துள்ளார். முதல் தர போட்டிகளில், 300 ரன்களை எடுத்த ஒரே வீக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமைக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாவே தலைநகர் ஹராரேவில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், ஒமைக்ரான் ரக கொரோனா வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வருவதால் ஜிமாவே பல்வேறு நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இத்னால், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  சர்வதேச போட்டிகளில் பெறப்பட்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அணிகள் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து