முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விருப்பம்: ஆப்கன் பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.  அப்போது, கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்றும் தலிபான் அமைப்பு கூறியது.  ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையும், அடுத்தடுத்த தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இதற்கு அண்டை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் கூறியுள்ளார்.  இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

இஸ்லாமிய எமிரேட் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு, பொருளாதார உறவு மற்றும் சக வாழ்க்கை கொண்டிருக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது. அது எங்கள் கொள்கை அல்ல.  ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம். ஆப்கானிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பது யாருக்கும் பயனளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!