எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை மக்கள் நடுகிறார்கள் எனவும் நாம் இயற்கையை பாதுகாக்கும் போது அதற்கு பதிலாக இயற்கையும் நம்மை பாதுகாக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்திற்கான மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது,
இந்த நாளில் நாட்டின் ஆயுதப் படையினரை நினைவு கூறுவதோடு நெஞ்சுரம் கொண்டவர்களையும் நினைவு கூர்கிறோம். நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம். அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும். உத்தர பிரதேசத்தின் ஜலான் என்ற இடத்தில் நூன் என அழைக்கப்படும் ஆறு இருந்தது. படிப்படியாக இந்த ஆறு அழிவின் விளிம்புக்கு சென்றது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஜலான் மக்கள் நடப்பு ஆண்டு குழு ஒன்றை அமைத்து நதிக்கு புத்துயிர் அளித்தனர். நாம் இயற்கையை பாதுகாக்கும் போது அது நம்மை பாதுகாக்கும். தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள், கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை நடுகிறார்கள். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்திற்கு பாதுகாப்பாக இருக்கின்றன பனைமரங்கள். நாம் இயற்கையை பாதுகாக்கும் போது இயற்கையும் நம்மை பாதுகாக்கும். இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டை தமிழக மக்கள் பரந்துபட்ட அளவிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


