முக்கிய செய்திகள்

விஷாலின் வீரமே வாகை சூடும்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Vishal 2021 11 28

Source: provided

விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் வீரமே வாகை சூடும். அதிகார கொடுமைக்கு  எதிராக சாமானியன் ஒருவன் போர்க்கொடி உயர்த்தும் கதைதான் வீரமே வாகை சூடும் படத்தின் கதை.  படத்தில்   டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். கமர்ஷியல் ஆக்ஷ்ன் கலந்து உருவாகியுள்ள இப்படத்துக்கு கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹைத்ராபாத்திலும்,  சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று படம் வெளியாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து