முக்கிய செய்திகள்

2000 ரூபாய் – விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
2000-rupees---Review 2021 1

Source: provided

விவசாயி அய்யநாதன் தனது மனைவி பிரசவ சிகிச்சைக்காக ஏடிஎம்மில் எடுக்கப்போகிறார்,  வந்த 2000 ரூபாய் நோட்டில் பேனாவால் எழுதி இருக்கிறது. அதனால் நோட்டை மருந்துக் கடைக்காரர் வாங்க மறுக்கிறார். வங்கியும் வாங்க மறுக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால்  குழந்தை இறந்து விடுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது விவசாயி வழக்கு தொடுக்கிறார். இன்னொருபுறம் ஒரு இளம் வக்கீல் வேற்று சாதி பெண்ணை திருமணம் செய்கிறார். ஆனால் அந்த பெண்ணை அவள் குடும்பத்தினரே கொலை செய்கின்றனர். இந்த இரண்டு வழக்கின் வாதங்களும் தீர்ப்புகளும் தான் 2000 நோட்டின் கதை. ஏடிஎம் மையங்களில் நிரப்பும் ரூபாய் நோட்டு முதல் அது  மக்களின் கைகளில் கிடைக்கும் வரை நடக்கும் வழிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம் முதல் மத்திய அரசின் அதிகார அத்துமீறல்கள் வரை  அக்குவேறு ஆணிவேறாக பீய்த்து காட்டி இருக்கின்றார் இயக்குனர் ருத்ரன். மொத்தத்தில் ரூ 2000  சட்டத் தெளிவுடன் கூடிய அருமையான படைப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து