முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை: பைடன்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே தவிர மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளது. 

 

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், ஒமிக்ரான் வைரஸ் திரிபு கவலைக்குரியதே. அதே வேளையில் மக்கள் பீதியடைய தேவையில்லை. முழு முடக்கம், ஊரடங்கு போன்றவை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல், பூஸ்டர் டோஸ், பரிசோதனை உள்ளிட்டவற்றவை அதிகரிப்பதன் மூலம் குளிர்காலத்தில் நாம் எவ்வாறு இந்த வைரசுக்கு எதிராக போராட உள்ளோம் என்பது குறித்து நான் விரிவான திட்டங்களை முன்வைக்கிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து