முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. நேரலைவிவாத நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக வந்த பூனை

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

டி.வி. நேரலையில் அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது பூனை குறுக்கிட்ட சுராரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களை பிரிக்கும் மையப் பகுதியில் அமைந்த நாடாக ஜார்ஜியா உள்ளது. இந்நாட்டின் தலைநகர் திபிலிசியாகும்.  ஜார்ஜியா அரசியல் தொடர்பாக கடந்த சில நாட்களுகு முன்னர் அந்நாட்டின் பிரபல டி.வி.யில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்காணோர் இந்த நேரடி விவாத நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜார்ஜியா அரசியல் குறித்து அரசியல்வாதி ஒருவரிடம் நிகழ்ச்சி அரங்கில் விவாதம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென விவாத மேடை மீது பூனை ஒன்று தாவி அமர்ந்தது. இதனால், சற்று அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, இது எங்கள் செல்லப்பிராணி பூனை ககுஷ்சா. இவர் நமது விவாதத்தில் கலந்து கொள்ளமாலா? என்று விவாத பங்கேற்பாளரிடம் கேட்டார். மேலும், ககுஷ்சா மிகவும் நல்ல செல்லப்பிராணி, ஆனால், நாம் மீண்டும் விவாதத்திற்கு திரும்ப வேண்டும் என நினைக்கிறேன்.  ககுஷ்சா நீ தயவு செய்து கிழே இறங்கு என்றார். அப்போது, விவாத நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகி கொண்டா இருக்கிறது? என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல்வாதி கேள்வி எழுப்பினார். ஆம், நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆனாலும் பரவாயில்லை என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பதிலளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து