முக்கிய செய்திகள்

5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

தமிழகத்தில் 5 காவல்துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஐ.ஈஸ்வர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த என்.மணிவண்ணன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார் சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் சென்னை சி.ஐ.டி. சிறப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.அரவிந்தன் செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து