முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு: உ.பி. தேர்வு ஒழுங்குமுறை ஆணையச்செயலாளர் கைது

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக உ.பி. மாநில தேர்வு ஒழுங்குமுறை ஆணையச் செயலாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை மாநில அளவிலான தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வாறு ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெற இருந்த நிலையில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை தேர்வை ரத்து செய்தது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படை யின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அமிதாப் யாஷ் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஐந்துமாவட்டங்களைச் சேர்ந்த 29 பேரிடம் வினாத்தாள் இருந்தது கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்களின் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் கசிவு தொடர்பாக, தேர்வு ஒழுங்குமுறை ஆணையச் செயலர் சஞ்சய் குமார் உபாத்யா (Secretary of Exam Regulatory Authority)வை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படை புதன்கிழமை கைது செய்தது. தற்போது இவர் துறைசார் நடவடிக்கைகளால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தோடர்பாக கடந்த நான்கு நாட்களில் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கசிவு தொடர்பான பல மணிநேர விசாரணைக்குப் பிறகு உபாத்யாயா கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த அச்சகத்தின் இயக்குநர் ராய் அனூப் பிரசாத், இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். பிரசாத்திடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வினாத்தாள்களை அச்சிடுவதற்கான உத்தரவை உபாத்யாய் தனது அச்சக நிறுவனத்திற்கு அக்டோபர் 26 அன்று பிறப்பித்தார் என்று பிரசாத் விசாரணையில் கூறியுள்ளார். இவ்வாறு கூடுதல் இயக்குநர் ஜெனரல் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து