எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காபூல் : ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பின்மை காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் 35 லட்சம் பேர் பட்டினியால் வாடுகின்றனர் என்று ஐ.நா. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டு மாத மத்தியில் தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டன. இதனால் ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் உள்நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ள சுமார் 35 லட்சம் ஆப்கான் மக்கள் பட்டியினால் வாடுவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் பாபர் பலோச் கூறுகையில்,
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருகிறது, பட்டினி இப்போது நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் உள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 55 சதவீதம் வறுமையை எதிர்கொள்கின்றனர். மேலும் பாதுகாப்பின்மை காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் 35 லட்சம் பேர் பட்டினியால் வாடுகின்றனர் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |