முக்கிய செய்திகள்

என்.சி.ஏ. இயக்குநராக வி.வி.எஸ்.லட்சுமண் வரும் 13-ம்தேதி பதவி ஏற்பு : மேற்கு இந்திய தீவுகளுக்கு முதல் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      விளையாட்டு
VVS-Lakshman 2021 12 05

Source: provided

புதுடெல்லி : தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமண் வரும் 12-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். முதல்பயணமாக மேற்குஇந்தியதீவுகளுக்கு 19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியுடன் பயணிக்க உள்ளார்.

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியின் இயக்குநராக இருந்த ராகுல் திராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, என்.சி.ஏ. அமைப்புக்கு இயக்குநராக வி.வி.எஸ். லட்சுமண் பரிந்துரைக்கப்பட்டார். இதற்கு முறைப்படி வி.வி.எஸ். லட்சுமணும் விண்ணப்பித்தார்.

வி.எஸ்.எஸ். லட்சுமண் விண்ணப்பம் பரிசீலக்கப்பட்டு என்.சி.ஏ. இயக்குநராக பி.சி.சி.ஐ. அமைப்புடம் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, நியூஸிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வரை வர்ணனையாளராக லட்சுமண் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடர் முடிந்தபின் வரும் 13-ம் தேதி என்.சி.ஏ. இயக்குநராக லட்சுமண் பதவி ஏற்க உள்ளார். அவருடன் ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், இங்கிலாந்து பந்துவீச்சுப் பயிற்சியாளருமான ட்ராய் கூலியும் பதவி ஏற்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து