முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரைச்செவ்வானம் - விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் “சித்திரைச் செவ்வானம்”. நாயகன் சமுத்திரக்கனி, கிராமம் ஒன்றில் மனைவி வித்யா மகள் பூஜா கண்ணன் ஆகியோருடன் மகிழ்ச்சியாக பிழைப்பை நடத்தி வருபவர். ஒருநாள் மனைவி வித்யா மீது மின்சாரம் பாய்ந்து தூக்கியெறிப்பட்டு மரணமடைகிறார். ஒரு மருத்துவர் கூட இல்லாத காரணத்தால் தான்,  தனது மனைவியை இழக்க நேரிட்டதால் தனது  மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்கிறார். மகள் பூஜா +2 வில் நல்ல மதிப்பெண் பெற்றும் “நீட்” எழுத தனியார் பயிற்சி வகுப்பு ஆஸ்டலில் தங்கிப் படிக்கிறார். இந்நிலையில் திடீரென மகள் காணாமல் போகிறார். அவளுக்கு என்னவாயிற்று இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை. சமுத்திரக்கனி தனது  முதிர் வயது கதாபாத்திரத்தை “நச்” என செய்திருக்கிறார். தனது உலகமே மகள் தான் என நினைத்து வாழும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாகவும் வலிமையானதாகவும் இருந்தது. அம்மா இறந்துவிட்டதை அறிந்து சிறுமியான மானஸ்வி கதறி அழும் காட்சி எதார்த்தம். போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ரீமா கல்லிங்கள், கதைக்கு சரியான தேர்வு. அபாரமான நடிப்பை கொண்டு வந்திருக்கிறார் பூஜா கண்ணன்., முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூன்று இளைஞர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சாம் சி எஸின் பின்னனி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. மொத்தத்தில் சித்திரைச் செவ்வானம் – வழியில் வலி குறைத்து, இறுதியில் வாழ வழி கொடுத்திருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து