முக்கிய செய்திகள்

நேராக படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசனிடம் விளக்கம் : கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Radhakrishnan 2021 07 03

Source: provided

சென்னை : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து தனிமைப் படுத்திக்கொள்ளாமல் நேராக படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து நடிகர் கமலஹாசனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து