முக்கிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணம்: தமிழக அரசாணை வெளியீடு

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து