முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் விமான நிறுவனங்கள் - விமான நிலையங்களுக்கு ஒரு ஆண்டில் ரூ.24,681 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் விமான நிறுவனங்கள் - விமான நிலையங்களுக்கு 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.24,681 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் மே 24 வரை உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சரவதேச விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய விமான நிறுவனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே .சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் 2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் முறையே ரூ.19,564 கோடி மற்றும் ரூ.5,116 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சில விமான நிறுவனங்கள் தங்கள் நிலுவைத் தொகையை வழங்க தவறிவிட்டதாகவும், இந்திய விமான நிலைய ஆணையம் அதன் கடன் கொள்கையின்படி நிலுவைத் தொகையை திரும்பப் பெறுவதற்காக விமான நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து