முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை நடந்த ஹெலிகாப்டர் விபத்துகளும்... பிரபலங்களின் உயிரிழப்பும்....

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்துக்களும், பிரபலங்களின் உயிரிழபும் வருமாறு:-

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தியாவில் விமானம், ஹெலிகாப்டர் போன்றவை விபத்தில் சிக்குவது பலமுறை நடந்துள்ளது. இதில், முக்கிய பிரபலங்கள் பலர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை ஹெலிகாப்டர் விபத்தில், 8 முக்கிய பிரமுகர்கள் இறந்துள்ளார்கள், 

  • 1) ஆகஸ்ட் 18, 1945 – ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
  • 2) மே 30, 1973 – ல் மத்திய அமைச்சர், மோகன் குமாரமங்கலம்.
  • 3) ஜூன் 23, 1980 – ல் காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் காந்தி.
  • 4) நவம்பர் 14, 1997 – ல் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் என்.வி.என் சோமு.
  • 5) செப்டம்பர் 30, 2001 – ல் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா.
  • 6) மார்ச் 3, 2002 -ல் ஜி.எம்.சி. மக்களவை சபாநாயகர் பாலயோகி.
  • 7) ஏப்ரல் 17, 2004 -ல் நடிகை சவுந்தர்யா.
  • 8) செப்டம்பர் 3, 2009 – ல் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோர் இறந்துள்ளார்கள்.
  • 9) டிசம்பர் 8, 2021-ல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்த்திரியாக  இருமுறை பதவி வகித்தவர் ராஜசேகர ரெட்டி என்கிற ஒய்எஸ்ஆர். கடந்த 2009ம் ஆண்டில் இவர் பயணித்த  ஹெலிகாப்டர் ருத்ரகொண்டா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.  இதில், ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சவுந்தர்யா. அம்மன், அருணாச்சலம். படையப்பா உட்பட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தெலுங்கு சினிமாவின் நவீன சாவித்ரி என்று அழைக்கும் அளவுக்கு தனது நடிப்பு திறமையால் மக்களின் மனங்களை வென்ற சவுந்தர்யா, கடந்த 2004ம் ஆண்டு தான் சார்ந்த பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கரிம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது விமானம் வெடித்து சவுந்தர்யா உயிரிழந்தார்.

மாதவராவ் சிந்தியா பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் குவாலியரின் சுதேச அரசின் கடைசி ஆளும் மகாராஜாவான ஜீவஜிரோ சிந்தியாவின் மகன். மத்திய விமான போக்குவரத்து அமைச்சர், மத்திய சுற்றுலா துறை அமைச்சர், மத்திய ரெயில்வே இணை அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த சிந்தியா, கடந்த 2001ம் ஆண்டு உத்தரப் பிரதேசம் அருகே விமான விபத்தில் உயிரிழந்தார்.

ஜி. எம். சி. பாலாயோகி ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரான இவர். இந்தியாவின் 12வது மக்களவை தலைவராக பணியாற்றியுள்ளார்.  சபாநாயகராக இருந்தபோதே கடந்த 2002ம் ஆண்டு  ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

சஞ்சய் காந்தி இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன்.  இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவராக உருவாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி கடந்த 1980ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார்.

மோகன் குமாரமங்கலம் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.சுப்பராயனின் மகன்.  மத்திய இரும்பு மற்றும் சுரங்கத்துறை மந்திரியாக இருந்துள்ள மோகன் குமாரமங்கலம் கடந்த 1973ம் ஆண்டு உயிரிழந்தார். இவர் பயன்படுத்தும் பார்க்கர் பேனா மற்றும் காதில் அணியும் கருவி மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

டோர்ஜி காண்டு  அருணாச்சல பிரதேச  முன்னாள் முதல் மந்த்திரி  2011ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இவர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. மே 5ம் தேதி டோர்ஜி காண்டுவின்  உயிரிழப்பு உறுதிபடுத்தப்பட்டது.

ஜின்டல் என்று அழைக்கப்படும் ஓம் பிரகாஷ்  ஜின்டல். மாபெரும் தொழில் அதிபராக திகழ்ந்தவர்.  அரியானாவின் மின் துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார். 2005ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து