முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் ஏற்றும் போது கழன்று சோனியாவின் கைகளில் விழுந்த காங்கிரஸ் கொடி

செவ்வாய்க்கிழமை, 28 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு விழாவையொட்டி கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றும் போது அது இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் கரங்களில் விழுந்தது. இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு விழா நேற்று  கொண்டாடப்பட்டது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரசுக்கு உண்டு.இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை கட்சிக் கொடி ஏற்ற வருகை தந்தார் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி. நிகழ்விடத்தில் வெள்ளை நிற கதர் உடுப்பில், சட்டையில் கட்சிக் கொடி தாங்கி ஏராளமான தொண்டர்கள் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்திருந்தனர்.

 

அப்போது, கட்சிக் கொடி திடீரென கழன்று இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் கரங்களில் விழுந்தது. இதனால் சோனியா காந்தி அதிர்ச்சியில் ஆழ்ந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!