முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி ஏ.டி.எம். பரிவர்த்தனை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

சனிக்கிழமை, 1 ஜனவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர 2019-ல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஏ.டி.எம். கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு அளவையும் மறு ஆய்வு செய்தது. அதன்படி ஏ.டி.எம். பரிவர்த்தனைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

முதல் கட்டமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இது போலவே ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணமும் மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்பட்டது.  வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இதே போல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் எடுப்பதாக இருந்தால் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத ஏ.டி.எம். மையங்களில் 5 முறையும் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

ஏ.டி.எம். இயந்திரங்களில் போன்றவற்றுக்கான செலவு அதிகரித்துள்ளதால் வங்கிகள் ஏ.டி.எம். பரிவர்த்தனைக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி வங்கிகள் தங்களது ஏ.டி.எம். பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தியது. ஜனவரி 1-ம் தேதியான நேற்று முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி ஒரு வாடிக்கையாளர் வங்கி ஏ.டி.எம்.களில் அனுமதிக்கப்பட்ட இலவசப் பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இனி 21 ரூபாய் பிடிக்கப்படும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீங்கள் 100 ரூபாய் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் 21 ரூபாய் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து