முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 மணி நேர அலைபேசி வழியாக தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு உதவ உதவி சேவை மையம் துவக்கம்

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு உதவிட 24 மணி நேர அலைபேசி வழி உதவி சேவை மையம் ஒன்றை தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது., தமிழ்நாட்டில் தொழில்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வண்ணம், உற்பத்தி தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் இரவு ஊரடங்கு காலத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, 24 மணி நேர அலைபேசி வழி உதவி சேவை மையம் ஒன்றை தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் தொழிற்துறை உதவி சேவை மையம் உடனடியாக செயல்பாட்டிற்கு வரும். எனவே, உற்பத்தித் தொழில், சரக்குப் போக்குவரத்து, விநியோகம், கட்டுமானம் ஆகியவற்றில் ஈடுபடும் தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றிட தங்களுக்குத் தேவையான உதவிகளை பெற்றிடவும், சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றிடவும், கீழ்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் செல்போன் எண்கள் விவரம் வருமாறு:- பிரசாந்த் - 7823928264, ராஜேஷ் - 9629122906

சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், நீலகிரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், தேனி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் பெயரும், செல்போன் எண்களும்- ராஜவேல் - 7823928263, ராகவ்-7823928262.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிபேட்டை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் பெயர், செல்போன் எண்-தாமேஷ் - 9840084662, 

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் பெயரும், செல்போன் எண்களும்- சுரேஷ்- 9787426831, மகேஷ்-7824001216 மேலும், இது தொடர்பாக [email protected] என்ற மின்அஞ்சல் முக வரியையும் தொடர்பு கொள்ளலாம்.

இதே போன்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றிடவும், சந்தேகங்களுக்கு தெளிவு பெறவும் 9150093678 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். (இந்த அலைபேசி எண் இன்று (9.1.2022) முதல் செயல்பாட்டிற்கு வரும்). மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் [email protected] என்ற மின் அஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து