முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படி, பொங்கல் போனஸ் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழக கோவில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார். 

மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழகத்தில் கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, கோவில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் சீட்டு விற்பனையாளர்கள், அர்ச்சகர்களுக்கான மாத சாம்பளம் ரூ.2,500-ஆகவும், கோவில் காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1,400 ஆகவும் சம்பளம் உயர்கிறது. மேலும், கோயில் பணியாளர்களுக்கான பொங்கல் போனசை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து