முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை கொல்லும் வைரஸ் வரவேற்கப்படாது: பிரேசில் அதிபரின் கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு பதில்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வரவேற்கத்தக்க வைரஸ் என பிரேசில் அதிபர் போல்சனோரா கருத்து தெரிவித்த நிலையில் உலக சுகாதார அமைப்பு அதற்கு பதில் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் பிரேசில் அதிபர் போல்சனோரா, உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸை வரவேற்கலாம். இது கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கூடு கொண்டு வரலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் எமர்ஜென்சி இயக்குனர் மைக் ரியான், ஒமைக்கரான் வைரஸ் தொற்று தனிப்பட்ட நபருக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் லேசான நோய் என்பது அர்த்தம் அல்ல.  உலகளவில் ஏரளமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தடுப்பூசியால் தடுக்கப்பட வேண்டிய நோய். இது வைரஸ் தொற்றை வரவேற்பதற்கான நேரம் அல்ல. மக்களை கொல்லும் வைரஸ் வரவேற்கப்படாது. தடுப்பூசியின் சரியான பயன்பாட்டின் மூலம் அதை தடுக்க முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து