முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொம்பு வச்ச சிங்கம்டா விமர்சனம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சசிக்குமார், மடோனா அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் கொம்பு வச்ச சிங்கம்டா .பெரியார் வலியுறுத்திய சாதி மதங்களைக் கடந்த தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் ஜாதி வெறி அரசியல் நடத்துபவர்கள் கொட்டம் அடங்கும், சமூகத்தில் அமைதி நிலவும் என்ற கருத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். கதை ; கரூர் பேரூராட்சியில் மக்கள் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் மகேந்திரன். இவருடைய ஒரே மகன் சசிகுமார். இவருக்கு ஐந்து நண்பர்கள். சிறுவயதிலிருந்தே சாதி, மத வேறுபாடின்றி பழகி வருகிறார்கள். சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். அதே நேரத்தில் அங்கு உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. பிறகு அது ஜாதி பிரச்சினையாக மாறிவிடுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக் கதை. கதாநாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் வழக்கமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார். கதாநாயகி மடோனா அவ்வப்போது வந்து போகிறார். சூரி தனது சேட்டைகளால் கலகலப்பூட்டுகிறார். இயக்குநர் மகேந்திரனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். ஜாதி அரசியல் எந்தளவிற்கு சமூகத்தில் ஊடுருவியுள்ளது என்பதை படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் வெளிப்படுத்தியுள்ளார். கதையின் நோக்கம் உயர்ந்ததுதான். ஆனால் இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து