முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேள் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

அரக்க குனம் கொண்ட ஒருவனுக்கு பாசத்தை ஊட்டி அவனுக்கு அன்பின் வலியை உணர்த்தும் படம்தான் தேள். கதை - கோயம்பேடு சந்தையில் காய் கனிகளைத் தாண்டி முக்கியமான தொழிலாக இருப்பது கந்து வட்டி தொழில். வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காவிட்டால் அரக்க குனம் கொண்ட அடியாளான பிரபுதேவா நேரில் சென்று… அடித்து துவைத்துப் பணத்தை பிடுங்குவார். அந்த அரக்கனை ஒருபக்கம் அந்த ஏரியா டான்சரான சம்யுக்தா ஹெக்டே துரத்தி துரத்திக் காதலிக்க இன்னொரு பக்கம் ” நான்தான் உன் அம்மா…” என்று ஈஸ்வரி ராவ் பாசத்தைக் காட்டித் துரத்துகிறார். ஆனாலும் அந்த அம்மாவுக்கும் அதே கதிதான். அப்படிப்பட்ட கல் நெஞ்சனைக் கரைத்து பாச வலைக்குள் கொண்டு வரும் தாயின் நோக்கம்தான் மீதிக் கதை. தன் கண் முன்னே ஒரு குழந்தையை பிரசவிக்க ஒரு பெண் எத்தனை வேதனைப்படுகிறார் என்பதை கண்ணுற்று தாயின் பெருமையை அவர் உணரும் கட்டத்தில் அற்புதமாக செய்திருக்கிறார் நடனப் புயல். இந்த வேடத்தில் நடித்த நாயகி சம்யுக்தா ஹெக்டேவைப் பாராட்டலாம். முன்பாதியில் யோகிபாபு வந்து படத்தின் வறட்சியை முடிந்த அளவில் தணித்திருக்கிறார். ஹீரோவும், இயக்குனரும் மாஸ்டர் கிளாஸ் நடன மாஸ்டர்களாக இருக்க, படத்தில் நடனத்துக்கு இன்னும் ஒதுக்கீடு கொடுத்திருக்கலாம்.சி.சத்யாவின் இசையில் அமைந்த தாய்ப்பாசப் பாடல் உருக்குகிறது. பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் தெரியும் நிறத்தில் படத்தின் தன்மை உணரவைக்கப் படுகிறது. பரபரப்பான மார்க்கெட்டில் அனாயசமாக படம்பிடித்து பாராட்ட வைக்கிறார். அந்தக் காட்சிகளில் இயக்குனரின் சாமர்த்தியமும் தெரிகிறது. முன்பாதியில் மெதுவாக நகரும் திரைக் கதை தாய்ப்பாசம் தொட்டதும் ஜிவ்வென்று கிளம்பி அதன் பின்னணி தெரியும் நேரம் விறுவிறுப்பு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து