முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் பர்ஸ்ட் லுக் வெளியீடு

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

கருணாஸ் நடிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ஆதார். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கருணாஸுடன், அருண்பாண்டியன், காலா  திலீபன்  உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். இப் படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. சசிகுமார் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில்  எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ஆதார் படம் உருவாகியிருக்கிறது  என்றார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பொங்கலன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். 'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசமுத்திரம் அம்பானி' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் - நடிகர் கருணாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், 'ஆதார்' படம் மீது பெறும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து