முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை, வெள்ள சீரமைப்பு பணிகளுக்கு நிவாரண நிதி வழங்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமித்ஷாவிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதாரங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு நிதி வழங்கிட வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

2021 வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ள முதல்வர், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசிடமிருந்து ரூ. 6230.45 கோடி நிதி உதவி கோரி தனது அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்கான பெரும் நிதித் தேவை மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதே வேளையில், கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையுத் சுட்டிக் காட்டியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள முதல்வர், தமிழகத்திற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் தாங்கள் உதவிட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  நேரில் சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து