முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்: பிரபல நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். அந்த அறிவிப்பை அவர் டுவிட்டரில் வெளியிட்டார்.

நடிகர் தனுஷ் - ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது பிரிவுக்கு இது காரணம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

தனுஷ் சமீபகாலமாக இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “அட்ராங்கி ரே” இந்தி படம் வெளியானது. இந்த படம் தமிழில் “கலாட்டா கல்யாணம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இன்னும் இந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது. இந்தி படங்களில் நடிப்பது தொடர்பாக அவர் ஐஸ்வர்யாவுடன் எதுவும் கலந்து ஆலோசிப்பது இல்லை. தன்னிச்சையாகவே முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.

இந்தி படங்களில் நடித்த பிறகு அவர் குடும்பத்தின் மீது நெருக்கம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் மீது சமீபகாலமாக ஐஸ்வர்யா கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் நடித்த படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நெருங்கி பழகியதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த பிரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

“மில்க்” நடிகை ஒருவருடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததாக சினிமா துறையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அந்த நடிகையின் வீட்டிலேயே அவர் எப்போதும் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததும் அவர் தனுசை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும் தனுஷ் அதை கேட்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு நடிகை ஒருவரிடமும் தனுஷ் நெருக்கம் காட்டி வந்தார். அதனாலும் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஒருவர் நடித்துள்ளார். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு பரவியது. இந்த நிலையில் அந்த நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து தனுஷ் தனக்கு தொல்லை கொடுப்பதாக புகார் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தனுஷ்- ஐஸ்வர்யா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கு இதுவே காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து