முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் அரசு துறைகளில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,587 பயனாளிகளுக்கு 157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில், அமைச்சர் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தருமபுரி மாவட்ட கலெக்டர் ச. திவ்யதர்ஷினி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து