எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பார்ல்: இன்று இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே.எல். ராகுல் பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
296 ரன் குவிப்பு...
பார்ல் நகரில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன் குவித்தது. கேப்டன் பவுமா, டூசன் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பவுமா 110 ரன்னும், டூசன் 96 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 129 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா...
பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர்தவான் 79 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும், ஷர்துல் தாகூர் 43 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். நிகிடி, ஷம்சி, பெகுல்வாயோ தலா 2 விக்கெட்டும், கேசவ் மகாராஜ், மார்க்ராம் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பேட்ஸ்மேன்கள்...
இந்த தோல்வியால் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் கூறியதாவது.,எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவானும், வீராட் கோலியும் நன்றாக பேட்டிங் செய்தனர். 20 முதல் 25 ஓவர்கள் வரை இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.
நிலைத்து ஆடியிருக்க...
மிடில் ஓவர்களில் நாங்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து விட்டோம். மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டது. மிடில் ஓவர்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பந்துவீசி முக்கிய மான விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். மிடில் ஓவரில் ஒரு ஜோடி யாவது நிலைத்து ஆடியிருக்க வேண்டும்.நாங்கள் எக்ஸ்ட்ரா மூலம் கிட்டத்தட்ட 20 ரன்கள் வரை கொடுத்துவிட்டோம். இது அதிகமானதே. நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். வீரர்கள் அதிலிருந்து பாடம் கற்று இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப் பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


