முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிபொருட்கள் கொண்டு சென்ற லாரி மீது பைக் மோதி பயங்கர வெடி விபத்து: 17 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

சுரங்க வேலைக்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி மீது பைக் மோதியதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கானா. இந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்திற்கு சுரங்க வேலைகள் செய்ய தேவையான வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி நேற்று பொகாசா என்ற நகர் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது.

அபியெட் என்ற பகுதியில் சந்தைப் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வேகமாக வந்த பைக் மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரியில் தீப்பற்றியுள்ளது. இதனால், சரக்கு லாரியில் இருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.  இந்த கோர வெடி விபத்தில் சந்தைப்பகுதி முழுவதும் நிலைகுலைந்தது. சக்திவாய்ந்த அதிக அளவிலான வெடிமருந்து வெடித்ததில் அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின.  இந்த வெடிவிபத்தில் 17 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து