முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - ஆந்திரா இடையேயான 4 ரெயில்கள் பிப்.24-ம் தேதி வரை ரத்து

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ரெயில்களை இயக்குவதற்கான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ரெயில்களை இயக்க முடியவில்லை என்று தெரியவருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தெற்கு மத்திய ரெயில்வே ஆலோசனையின் பேரில் ரெயில்களை இயக்க முடியாத சூழ்நிலையில் 4 ரெயில்கள் நேற்று முதல் வருகிற 24-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் இருந்து இரவு 7.25 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் பாசஞ்சர் சிறப்பு ரெயில்,  காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் திருப்பதி பாசஞ்சர் ரெயில்,  ஆந்திர மாநிலம் பித்தர குண்டாவில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்., சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ராகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரெயில்களை இயக்குவதற்கான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ரெயில்களை இயக்க முடியவில்லை என்று தெரியவருகிறது. தெற்கு ரெயில்வேயில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படுகின்ற 8 பயணிகள் ரெயில்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து