முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இருந்து டெல்லிக்கு விமான சேவை தற்காலிக ரத்து

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரையில் இருந்து டெல்லிக்கு விமான சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவலால் மத்திய அரசு விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் மதுரையிலிருந்து டெல்லிக்கு பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த 2 விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோல மதுரையிலிருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு காலை, மாலை என விமான சேவைகள் இருந்த நிலையில் அவற்றில் இரவு நேர சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து