முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழதத்தில் 7 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு: எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி விடக் கூடாது : ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது நாட்டில் எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி விடக்கூடாது என்று தெரிவித்த பிரதமர் மோடி, பின்தங்கிய மாவட்டங்களை எடுத்துக்காட்டான நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சமச்சீரற்ற தன்மையை நீக்க தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது.

நாட்டு மக்கள் தங்களின் லட்சியங்களுக்காக இரவு பகலும் உழைத்து கொண்டே உள்ளனர். தங்களின் லட்சியங்களையும் ஓரளவுக்கு நிறைவேற்றுகிறார்கள். நாட்டின் பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே போனாலும் அதற்கேற்ற வகையில் திட்டங்களும் முன்நிலைப்படுத்தப்பட்டது. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் சில மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகளை வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டங்கள் நீக்கி வருகிறது; கடந்த காலங்களில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்களாக கருத்தப்பட்டவை இன்று எடுத்துக்காட்டாக உள்ளது. மாநில முதலமைச்சர்களும் மாவட்ட நிர்வாக பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக நம்புகிறார்கள் என்றால் இது மாவட்ட ஆட்சியர்களின் ஒட்டுமொத்த முயற்சியே.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள எடுத்துக்காட்டான மாவட்டங்களில் "ஜன்தன்" கணக்குகள் 4-5 மடங்கு அதிகரித்துள்ளது. இவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி கழிப்பறை, ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார இணைப்பு என வசதிகள் பெருகிவிட்டது. ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றறிந்து அதனை மற்றவருக்கும் கற்பிப்பது என்பது நல்லாட்சியின் மூலதனம் ஆகும்.

எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டங்களில் வாழும் மக்கள் முன்னேற வேண்டும் என்ற ஏக்கத்தில் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை வறுமையிலேயே கழித்துள்ளனர். ஒவ்வொரு சிறிய முயற்சிக்கும் கடுமையாக உழைக்கும் மக்கள் எந்த ஒரு பிரச்னையையும் தைரியமாக எதிர்கொள்கின்றனர். மாவட்டங்களில் உள்ள அடிப்படை பிரச்னைகளை அறிந்துகொள்ள மக்களிடம் நேரடியாக அவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டது. "டிஜிட்டல் இந்தியா" எனும் வடிவத்தில் புதிய புரட்சியை கண்டுவரும் இந்தியா எவ்விவத்திலும் பின்தங்கி விடக்கூடாது என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். நாட்டின் எந்த பகுதியும் வளர்ச்சி பாதையில் இருந்து விலகி விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பிரதமரின் தொலை நோக்கினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதை இந்த கலந்துரையாடல் நோக்கமாக கொண்டிருந்தது.

இந்த ஆலோசனையின் போது மாவட்டங்களில் அரசு திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்தார். மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளின் பல்வேறு திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து