எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி. ஆட்ட நடுவருமான ஆண்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் மேனேஜரிடம் மன்னிப்புக் கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆட்ட நடுவராக...
சர்ச்சைகளை கிளப்பிய கைகுலுக்கல் விவகார இந்தியா - பாகிஸ்தான் மேட்சில் ஆட்ட நடுவராக இருந்தவர் ஆண்டி பைகிராஃப்ட். யு.ஏ.இ. அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது, ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராப்ட்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, அதற்கு ஐ.சி.சி. மறுப்பு தெரிவித்திருந்தது, இந்நிலையில் மைதானத்திற்கு வருவதற்கு பாகிஸ்தான் வீரர்கள் தாமதம் செய்தனர்.
மன்னிப்புக் கேட்டார்...
ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமானது இந்தச் சர்ச்சையினால்தான். இந்நிலையில் ஆண்டி பைகிராஃப்ட், பாகிஸ்தான் கேப்டன், பாகிஸ்தான் மேலாளர் ஆகியோர் தனியறையில் சந்தித்ததாகத் தெரிகிறது, அதன் பிறகே பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மேலாளரிடம் ஆட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்புக் கேட்டார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இரு அணி வீரர்கள் கைகுலுக்குவதை இவர்தான் தடுத்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


